Posts

Showing posts from April, 2009

விலைமாது..........???

Image
விழியோடு விழி மோதி கண்ணீர் சிந்துகின்ற நேரம் என் மாலை பொழுதின் -மஞ்சு விரட்டு விளையாட்டு  எல்லோர்க்கும் இரவு நேரம் இருட்டாகும்போது - ஏனோ எனக்கு மட்டும் வெளிச்சம் பிறக்கிறது  எத்தனை முறை என்று எண்ணிப்பார்க்க தோன்ற வில்லை  எனக்கு தினமும் முதல் இரவுதான் - புது வரவுடன் மட்டும் மற்றவர்க்கெல்லாம் இல்லாத சமூக உணர்வு எனக்கு மட்டும்  காப்பாகத்தான் உறவு கொள்கிறேன் எனக்கு தெரியாது  இவ்வுலகில் எத்தனை பேர் மற்றவர்களை மகிழ்விப்பார்கள் என்று  ஆனால் நான் ....!!!!  சொர்கத்தில் நிட்சயமாக எனக்கு ஒரு இடம் உண்டு  காலம் இதை தவறு என்று சொல்லாதவரை குடை இருந்தும் மழையில் நனையும் காளான் போலதான் என் வாழ்க்கை  வழி மாறிய பயணம் -மற்றவர்களிடமிருந்து  எத்தனையோ ஆண்களின் ஊடல் பசிக்கு  விருந்தாய் என் உடல் மட்டும் உள்ளம் மட்டும் ஏனோ தேடி தவிக்கிறது  என்  உள்ளத்தை ஆட்கொள்ள ஒருவனை  நானும்  ஒரு பெண் என்பதால் ..!! எனக்கு தெரியும் மனைவிகளின் மனது என்ன செய்வது தொழில் தர்மம் பலன் கொடுக்க துடிக்கிறது  தூங்காத இரவுகள் கண்ட கண்கள் இது உதயம் கொண்ட சூரியனை கண்டதில்லை  மீண்டும் ஒரு முறை திரும்பிப்பார்க்கிறேன்  நான் கடந்து வந்த...