ஒரு தலை காதல்....
என் வாழ்நாளில் வசந்தம் வீசிட எண்ணி முறையிட்டேன் என் எண்ணங்களை ஒரு காகிதத்துடன்.. ஏய் உன்னைத்தானடா..!!!! என் வாழ்நாளின் சாதனையகிவிட்டது நான் உன்னை கண்டது.. அது என்ன நீ சிரித்தாள் மட்டும் என் பேனா காகிதத்துடன் காதல் செய்ய தொடங்கிவிடுகிறது உலகத்தில் வானம் மட்டும் நிரந்தரமாகிவிட மாற்றம் கண்ட நிமிடங்களாய் ஆகிப்போகின்றன மேகங்கள் நீ என்னைக் கண்டு சிரிப்பதுபோல் தினசரி வித்தியாசப்படுகிறாய் உன்னை கண்டபிறகு என்னை நான் மாற்றிகொண்டது பல உனக்காக நான் செய்த முதல் அர்ப்பணம் நான் கடந்து வந்த ஆண்களின் வரிசையில் உனக்கு மட்டும் சிறப்பானதொரு இடம் என் மனதிற்குள் வெளிச்சத்தின் உண்மை இருட்டிலே தெரிவது போல் உன் அழகான முகம் என் ஆழ் மனதிற்குள் பத்திரமாய் எனக்கே அறிந்த உண்மை கண் திறந்து நான் கண்ட முதல் ஆண் என் தந்தை இரண்டாவதாய் நீ..!!! ஆழமான பாதிப்பு என்னுள் உன்னைப் பற்றி உனக்கே தெரியாமல் உன்னை படிக்க ஆரம்பித்துவிட்டேன் ஆசிரியர் இல்லாத பள்ளிக்கூடம் இது...!!! இறுமாப்பாய் இருக்கிறது நீ என் அருகில் இருக்கும்போழுதெல்லாம் குழந்தையான உன் குறும்புகள் நெஞ்சுக்குள் ஏனோ ஒரு சிறு கிறுக்கல்கள் அழியா கவி...