Posts

தள்ளி இருக்கும் தருணம்...

Image
  உன்னுடன் பழகிய கணத்தில் இருந்து தள்ளிவந்தால் என்னதான் ஆகும்? மூச்சு மட்டும் சற்று விட்டு எடுக்கும் இதயத்தின் துடிப்பில் வேகம் இருக்கும்... பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஊமையாகி, அழகிய நினைவுகளுடன் கை கோர்க்கும்  செய்யவே கூடாது என்பதெல்லாம் பொய்த்தே போகும்... நமக்கு பிடித்த இசை என் தனிமையை வசமாக்கி ஏங்கி தவிக்கும்... தொலைபேசியில் திளைத்துக் கொண்டே தடமரியா தூரம் சென்று உன் போல் பாவித்து கை பேசியை காதலித்திருக்கும்... அழகில்லை என்றாலும் ஆடை மாற்ற மறந்திருந்து முக்தியானது போல் முனகிக் கொண்டே மூன்றாம் பிறை கண்டிருக்கும்... கண்களின் காந்த சக்தி காணமல் போய், வன்மம் அற்ற வார்த்தைகளை வந்தனம் செய்திருக்கும்... அமைதியான அன்புள்ளம் அள்ளிக் கொள்ள ஆள் இன்றி ஆறுதல் தேடி ஆர்ப்பரிக்கும்... மொத்ததில் வாழ்க்கை ஒரு வேதனை ஆகி முற்றும் துறந்த முட்டாலாய் மூச்சயர்ந்து போகிருக்கும்.... வேதனைகள் வேண்டாமென உரிமையுடன் உறவாடி, தள்ளி நிற்க மறுத்து நின்று ஜல்லிக்கட்டில் அடங்கி போயிருக்கும்... உன்னிலிருந்து தள்ளி வைத்து தவித்து போக திறனின்றி இந்த எண்ணத்தை ஏளனம் செய்திருக்கும்... இந்த மானம் கெட்ட மனசை மயானத்தில...

கட்டவிழ்ந்த கண்கள் ...

Image
  உன் நினைவுகளின் சுவாசத்தை நிறுத்திவிட காற்றை கொஞ்சம் கேட்டுக்கொண்டேன்,என் தனிமையின் தாய் மடியில் உறங்கி கொள்ள தவித்து போகிறேன், உன் கண்களை காண கவலை இல்லா மனதை தேடி.. என் காதலை தொலைக்கிறேன், பார்க்கும் இடமெல்லாம், நினைக்கும் நிமிடம் எல்லாம் உன்னுடன் சேர்ந்து வாழ படிக்கிறேன் சேர்த்து வைத்த ஆசையெல்லாம் சோர்ந்து போனது, உன் மனம் உணர்ந்த மாற்றத்தால் மடிந்து போனது,  கேட்டும் புரியாத மொழியின் உருவம், மூளைக்குள் முட்டாள் என உணர்கிறேன், தவிக்கும் மனதை கண்ணீருக்கு அர்பணித்தேன்  உன் அருகில் இருக்கும் அருமையை, என் ஆழ் மனதிருக்குள் அலங்கரித்தேன் , சேவல் கோழியாய் கொண்டை  முறுக்கி, பெட்டை கோழியிடம் தஞ்சமடைந்துவிட்டேன்  பாறையை கடக்கும் நீர் வீழ்ச்சியாய் - உன் நினைவுகளின் படியேறி தலை கொடுத்து நனைத்துக்கொள்கிறேன், என் உணர்சிகளின் வழியே என் உயிர்ப்பை மீட்டெடுக்கிறேன்    செல்லமாக வந்த உன் பாச பரிவர்த்தனைகள் - மூச்சு முட்டி போகிறது என்னுள், எத்தனை முறை பார்த்தாலும் நினைவில் இல்லை உன் முகம், மீண்டும்  மீண்டும் பார்க்க தவிக்கிறேன்  என் கண் கொண்டு நான் கண்ட நிமிடங்...

ஏக்கம் கொண்டு...

Image
  விமர்சனம்... ஏக்கம் கொண்ட என் எண்ணங்களுக்கு மட்டும் இல்லாமல்  தன்னிச்சையான மனதின்   உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறது... தண்ணீருக்கும் தடுமாறும் குணம் உண்டு என் கண்ணீருக்கும் வேண்டும் அந்த விதி..! இரண்டுமே ஒரே ஜாதி என்பதால்   விதை இட்டால் முளைத்துக்கொள்ளும் என தெரிந்தால்  புதைத்து விடுவேன் என் நினைவுகளை..  காதலை  நீராக்கி வளர்த்துவிடுவேன் என் வாழ்வுதனை.. காய்க்கும் நேரமெல்லாம் கல்லடி படுகிறேன்... ஏன் எனக்கு உரிமையில்லையா...? நமதான உரிமையில் உரம் இட்டேன்னே...! பலன் மட்டும் கூடாதாம் - இது என்ன கூத்து ? என்  அன்பை கொண்ட இடமெல்லாம், எனக்கு  சொந்தம் இல்லை  மனம் கொண்ட மரக்கொத்தி பறவையாய் - என் மரம் தேடி அலைகிறேன்  உன் காலடி பட்ட  இடமெல்லாம் இருளாகத்தான் இருக்கிறது  ஜன்னல் இல்லாத  அறைக்குள் நீ -  எனக்குள் வெளிச்சம் தேடி ஏற்றி  வைத்த விளக்காய் நான்  உன்னை கண்ட நேரம் கண்களுக்குள் காந்த சக்தியாய்  உள்ளார்ந்து போனால் - கண்ணில் விழுந்த மண் துகளாய்  கண்ணீரில் கரைந்து போகிறேன்  மண்ணில் ...

இதழில் கதை எழுதும் நேரம் ...

Image
  ஆணவக்காரி அவள்... என் காதலி  அவளின் முதல் முத்தம்  கன்னத்தில் இட்டால்... நான் கலங்கிவிடுவேன் என்ற அச்சத்தில்    என் நெஞ்சத்தில்... இதழ் பட்ட இடத்தில் மட்டும் இருதயம்  சற்று  நின்று போனது...      உன்  அங்கத்தின் அடக்குமுறைக்கு அடங்கிபோகி  மஞ்சத்தின் மையத்தில் தலை சாய்த்து, சஞ்சரிக்கும் உன் அழகை கண்டு  தண்ணீருக்குள் பூத்த தாமரையாக நம்  காதலை ஆலாபனை  செய்துவிட்டேன்...   சத்தமில்லாமல் நீ  செய்யும் இம்சைகெல்லாம் வெட்கமில்லாமல் வியந்து போனால், என்  பக்கம் வந்து பாய் விரிக்கிறாய்...  பெற்றெடுத்த பிள்ளை போல வாரிக்கொண்டு மழைக்கு பிடித்த குடையாய் மாறிப்போகிறாய்... 

முதுமையிலும் காதல்...

Image
  வயது,  நம் காலத்தை மட்டுமே தீர்மானிக்கும்... நம் காதலை அல்ல...!  இளமையில் மட்டுமல்ல....  உன் தலை நரைத்த நாட்களிலும் நம் காதல் ஒரு  குழந்தைதான்    பிரியாத வரம் கேட்டு காதலால்  கோர்த்த கைகள்...  என் கண்ணில் கண்ட கனவெல்லாம் கைப்பற்ற நினைத்து கணவனாகி போனேன்... இரவில் முளைத்த நம் முதல் உறவு...   முத்தத்தின் முனகளில்  தொடங்கியது...  கனத்த உடலை தாங்கி கசங்கிய உன் ஆடைகளில் ,   ஆசையுடன் அலங்கரித்த நம்  காமமும், காதலும்...  வாழ்கையின் அடையாளமாய்... நம் வாழ்வின் அணிகலன் விரத பூஜை கண்டதில்லை நான்... உன் கட்டில் பூஜையை கண்ட பிறகு...! காதலிக்க மறுத்த தருணங்களில்...தவழ்ந்து போகும் உன் நினைவுகள்...

பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

Image
  கடலும்... பெண்மையும்... அலையும்... மணலும் ரகசிய திருமணம் செய்தது  என்னவோ உண்மைதான்... உன் அலைகளால் என் பெண்மையை அனுபவிக்கிறாய்... எத்தனை முறை உரசி செல்கிறாய்  ஒவ்வொரு முறையும்  பெண்மையின் மென்மையை... மெய்ப்பிக்கிறாய்  புகுந்த வீடான  பூமிக்குள், பூத்திருக்கும்  பூமாலையாய் நானிருக்க... என் மனதில் ஆர்ப்பரித்து ஆருடம் பார்த்து செல்கிறாய்... 

உன் மடியில் என் தூக்கம்...

Image
இது என்ன... இந்த படம்.. ஏதோ ஒன்றை... இட்டுக்கட்டி இரட்டிப்பு செய்கிறது...                 தாய் மடிக்கும்... என் தேவைக்கும் இடையில் நடக்கும் கலவரம்... என்னை உன் காதலில் இட்டுச் செல்கிறது... உன் மடியில் தவழும் என் தலையில் உன் கை கோதும் போது கனத்து விடுகிறது என் மனது... தாய்மை என்ற உணர்வால்... என்னை பொருத்த வரை உன் காதலே என் தாய்மையாகும்.... இரவுக்கும் கண் இருக்குமானால்... அதுவும் என்னுடன் சேர்ந்து கண் விழித்து கவி பாடும்... அக்கறையுடன் நீ பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும்... பக்கம் பக்கமாய் பதில் சொல்லும்...   உன் மார்பில் மண்டியிடும் மணியின் பிடியில் அழகாக்கும் அந்த அட்டியல் மீதும்   பொறாமை கொள்கிறேன்...   என் நெஞ்சம் அது... வஞ்சனை இன்றி வஞ்சிக்கிறது...என்னை...! வறுமையின் காரணமாக இருக்கலாம்...நீ என்னைக் கொஞ்சமாக...கொஞ்சுவது அளவுக்கு மிஞ்சிய அமிர்தமும்...நஞ்சு...பரவாயில்லை... அளவோடு மட்டும் வேண்டாம்... உன் கொஞ்சலுக்கும் மதியுண்டு... எழுப்பி விட்டு எட்டி போகதே... என்னால் முடிந்தவரை முக்தி அடைகிறேன் உன் மடியில்... உன் ...