ஏக்கம் கொண்டு...
விமர்சனம்... ஏக்கம் கொண்ட என் எண்ணங்களுக்கு மட்டும் இல்லாமல் தன்னிச்சையான மனதின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறது... தண்ணீருக்கும் தடுமாறும் குணம் உண்டு என் கண்ணீருக்கும் வேண்டும் அந்த விதி..! இரண்டுமே ஒரே ஜாதி என்பதால் விதை இட்டால் முளைத்துக்கொள்ளும் என தெரிந்தால் புதைத்து விடுவேன் என் நினைவுகளை.. காதலை நீராக்கி வளர்த்துவிடுவேன் என் வாழ்வுதனை.. காய்க்கும் நேரமெல்லாம் கல்லடி படுகிறேன்... ஏன் எனக்கு உரிமையில்லையா...? நமதான உரிமையில் உரம் இட்டேன்னே...! பலன் மட்டும் கூடாதாம் - இது என்ன கூத்து ? என் அன்பை கொண்ட இடமெல்லாம், எனக்கு சொந்தம் இல்லை மனம் கொண்ட மரக்கொத்தி பறவையாய் - என் மரம் தேடி அலைகிறேன் உன் காலடி பட்ட இடமெல்லாம் இருளாகத்தான் இருக்கிறது ஜன்னல் இல்லாத அறைக்குள் நீ - எனக்குள் வெளிச்சம் தேடி ஏற்றி வைத்த விளக்காய் நான் உன்னை கண்ட நேரம் கண்களுக்குள் காந்த சக்தியாய் உள்ளார்ந்து போனால் - கண்ணில் விழுந்த மண் துகளாய் கண்ணீரில் கரைந்து போகிறேன் மண்ணில் ...