கட்டவிழ்ந்த கண்கள் ...
உன் நினைவுகளின் சுவாசத்தை நிறுத்திவிட காற்றை கொஞ்சம் கேட்டுக்கொண்டேன்,என் தனிமையின் தாய் மடியில் உறங்கி கொள்ள தவித்து போகிறேன், உன் கண்களை காண கவலை இல்லா மனதை தேடி.. என் காதலை தொலைக்கிறேன், பார்க்கும் இடமெல்லாம், நினைக்கும் நிமிடம் எல்லாம் உன்னுடன் சேர்ந்து வாழ படிக்கிறேன் சேர்த்து வைத்த ஆசையெல்லாம் சோர்ந்து போனது, உன் மனம் உணர்ந்த மாற்றத்தால் மடிந்து போனது, கேட்டும் புரியாத மொழியின் உருவம், மூளைக்குள் முட்டாள் என உணர்கிறேன், தவிக்கும் மனதை கண்ணீருக்கு அர்பணித்தேன் உன் அருகில் இருக்கும் அருமையை, என் ஆழ் மனதிருக்குள் அலங்கரித்தேன் , சேவல் கோழியாய் கொண்டை முறுக்கி, பெட்டை கோழியிடம் தஞ்சமடைந்துவிட்டேன் பாறையை கடக்கும் நீர் வீழ்ச்சியாய் - உன் நினைவுகளின் படியேறி தலை கொடுத்து நனைத்துக்கொள்கிறேன், என் உணர்சிகளின் வழியே என் உயிர்ப்பை மீட்டெடுக்கிறேன் செல்லமாக வந்த உன் பாச பரிவர்த்தனைகள் - மூச்சு முட்டி போகிறது என்னுள், எத்தனை முறை பார்த்தாலும் நினைவில் இல்லை உன் முகம், மீண்டும் மீண்டும் பார்க்க தவிக்கிறேன் என் கண் கொண்டு நான் கண்ட நிமிடங்...