ஒரு தலை காதல்....



என் வாழ்நாளில் வசந்தம் வீசிட எண்ணி
முறையிட்டேன் என் எண்ணங்களை 
ஒரு காகிதத்துடன்..  

ஏய் உன்னைத்தானடா..!!!! 

என் வாழ்நாளின் சாதனையகிவிட்டது 
நான் உன்னை கண்டது..

அது என்ன நீ சிரித்தாள் மட்டும் 
என் பேனா காகிதத்துடன் காதல் செய்ய தொடங்கிவிடுகிறது

உலகத்தில் வானம் மட்டும் நிரந்தரமாகிவிட 
மாற்றம் கண்ட நிமிடங்களாய் ஆகிப்போகின்றன மேகங்கள்
நீ என்னைக் கண்டு சிரிப்பதுபோல் தினசரி வித்தியாசப்படுகிறாய்

உன்னை கண்டபிறகு என்னை நான் மாற்றிகொண்டது பல 
உனக்காக நான் செய்த முதல் அர்ப்பணம்

நான் கடந்து வந்த ஆண்களின் வரிசையில்
உனக்கு மட்டும் சிறப்பானதொரு இடம் என் மனதிற்குள்

வெளிச்சத்தின் உண்மை இருட்டிலே தெரிவது போல்
உன் அழகான முகம் என் ஆழ் மனதிற்குள் பத்திரமாய்
எனக்கே அறிந்த உண்மை

கண் திறந்து நான் கண்ட முதல் ஆண் என் தந்தை 
இரண்டாவதாய் நீ..!!! ஆழமான பாதிப்பு என்னுள்

உன்னைப் பற்றி உனக்கே தெரியாமல் 
உன்னை படிக்க ஆரம்பித்துவிட்டேன் 
ஆசிரியர் இல்லாத பள்ளிக்கூடம் இது...!!!

இறுமாப்பாய் இருக்கிறது 
நீ என் அருகில் இருக்கும்போழுதெல்லாம்

குழந்தையான உன் குறும்புகள்  
நெஞ்சுக்குள் ஏனோ ஒரு சிறு கிறுக்கல்கள் 
அழியா கவிதையாய்

நேரம் பார்க்க கடிகாரத்தை பார்க்கும்பொழுதெல்லாம்
நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு அப்படி ஒரு ஒற்றுமை 
மூன்றோருபோழுதுக்கு நம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்..!!!

இத்தனை நாள் தெரியவில்லை எனக்கு
கவிதை படைக்க இப்படி ஓர் ஆற்றல் இருப்பது என்று..!!!

இப்பொழுதெல்லாம் வெற்று காகிதம் கிடைத்துவிட்டால்
மனது உன்னைப்பற்றியே கவிதை எழுத சொல்கிறது 
பெரும் காகித மூட்டை என் வீட்டிற்குள்

என்னையும் கவிஞையாக்கிய பெருமை
உன்னையேச் சேரும்

இப்படி எத்தனைச் சொல்வது உன்னைப் பற்றி
கடிகார முள் சோர்ந்துவிடும்
இப்படி உன்னைப் பற்றியே சிந்திக்கிறது என் மனம்.... 

அப்படி ஒரு கணமாவது சிந்திப்பாயா என்னைப் பற்றி..????? 
அறியவில்லை நான்...!!!  சு.பிரகாஷ்

Comments

Popular posts from this blog

விலைமாது..........???

பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

அன்பு காதலிக்கு ...........