பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

 


கடலும்... பெண்மையும்...

அலையும்... மணலும் ரகசிய திருமணம் செய்தது  என்னவோ உண்மைதான்...

உன் அலைகளால் என் பெண்மையை அனுபவிக்கிறாய்... எத்தனை முறை உரசி செல்கிறாய் 

ஒவ்வொரு முறையும்  பெண்மையின் மென்மையை... மெய்ப்பிக்கிறாய் 

புகுந்த வீடான  பூமிக்குள், பூத்திருக்கும்  பூமாலையாய் நானிருக்க... என் மனதில் ஆர்ப்பரித்து ஆருடம் பார்த்து செல்கிறாய்... 

உண்மையில் ஆழமானது தான் இந்த கடல்,  பெண்மையின் மனமரியாதவன் நீயில்லை...  உன் மனம் அறியும் தேடலில் நான்...

தோல்வி பயம் தான் என்னுள்... நீ இருக்கும் தைரியத்தில் என் பயணம் உன்மேல் மூழ்காத படகாய்...

துள்ளிக்குதிக்கும் மீனுக்கும் எனக்கும் என்ன வேற்றுமை... மனதளவில் என்னை தூண்டில் இட்டு தூக்கிலிட்டாய் மனதை...

மணலாக என் எண்ணங்கள் மலர்ந்து இருக்க... என்னை சீண்டி விட்டு சில்மிஷம் செய்கிறாய்... உனக்கான ஓவியத்தை நான் வரைய  மீண்டும், மீண்டும் அழித்து செல்கிறாய் அறிய முடியாத ஓவியமாய் நீ ...

சிறுக சிறுக சேர்த்து வைத்த என் பெண்மையெல்லாம் உன் பேராசையால் பெரிய அலையோடு பிய்த்துகொண்டு போகிறாய்... 

யாருக்காக இத்தனை முறை முயற்சிக்கிறாய்... ?  பறந்து விரிந்த மனதை... பந்தியில் விரித்து, புள்ளி வைத்த பூ கோலமாய் நீல நிறத்தில் கோலமிடுகிறாய்...!   அழகுக்கு நிலாவை விட்டு தூது விடுகிறாய்...

 உனக்காக நான் கரையாக காத்திருக்க... மீண்டும், மீண்டு வந்து போகிறாய்... கொஞ்ச நேரம் கொஞ்சி போனால் என்ன... கெஞ்சி தானே கேட்கிறேன்...

அறிவியலும் அசந்து போகும் உன் அழகை கண்டு... அத்தனை அதிசயம் உன்னுள்...

மீட்ட முடியாத வீணையாக,  என் கனவுகள் வீணாக கடலில் தஞ்சம் 

என் மனம் அறியா அறிவியல் அது... 

இளைப்பாறி கொள்ள கொஞ்சம் இடம் தேடி, இதயத்தை தொலைத்து  தடம் மாறிய படகு நீ ...வழி பறி இல்லா விட்டால்... ! உன்  காதல் எனக்கே சொந்தம்...

அக்கரையும், உன் அக்கறையும் ஒன்றுதான்... நான் மட்டுமெ அறியும் வழி தடம்... என் கண்களின் கலங்கரை விளக்கமாக உன் பயண பதிவுகள்...

 என் காதலின் ஆழத்தை அறிய வைத்து பல முறை துள்ளி கொண்டு, துணிந்து வருகிறாய்...

என்மேல் உன் ஆசை கொண்டு பாயத்தான் பார்க்கிறாய்..என்னை கண்ட கணத்தில்... உன் இடம் தேடி துவண்டு ஓடுகிறாய்... 

இது என்ன விதியின விளையாட்டா ...?

அலைகளெல்லாம் ஆண்மையானால்...! நான் உனக்கு மணலாய் பெண்மையாவேன்...!

 அறிவியலுக்கும் ஆயுசு உண்டு,  எந்த விதிக்கும் கட்டுப்பாடு இல்லை கண்டுபிடிக்கும் வரை...

கடலும்... நீயும்  ஒன்றானால், நான் நீ உரசும் கரையாகவே  இருக்கிறேன்... மீண்டும் மீண்டும் நீ... என்னை அடைய முயற்சிப்பதால்...  என்னை மட்டும் விட்டு விடாதே... உன் விலகலை விரும்பாதவள் நான்...  

இப்படியான ஓர் பெண்மை...மணல் போல் ஓவியமாய்... அந்த கடல் அலைகளை நோக்கி...அவனின் வருகைக்காக காத்திருக்கிறேன்....    . 



Comments

Popular posts from this blog

விலைமாது..........???

அன்பு காதலிக்கு ...........