கட்டவிழ்ந்த கண்கள் ...

 



உன் நினைவுகளின் சுவாசத்தை நிறுத்திவிட காற்றை கொஞ்சம் கேட்டுக்கொண்டேன்,என் தனிமையின் தாய் மடியில் உறங்கி கொள்ள தவித்து போகிறேன்,

உன் கண்களை காண கவலை இல்லா மனதை தேடி.. என் காதலை தொலைக்கிறேன், பார்க்கும் இடமெல்லாம், நினைக்கும் நிமிடம் எல்லாம் உன்னுடன் சேர்ந்து வாழ படிக்கிறேன்

சேர்த்து வைத்த ஆசையெல்லாம் சோர்ந்து போனது, உன் மனம் உணர்ந்த மாற்றத்தால் மடிந்து போனது, 

கேட்டும் புரியாத மொழியின் உருவம், மூளைக்குள் முட்டாள் என உணர்கிறேன், தவிக்கும் மனதை கண்ணீருக்கு அர்பணித்தேன் 

உன் அருகில் இருக்கும் அருமையை, என் ஆழ் மனதிருக்குள் அலங்கரித்தேன் , சேவல் கோழியாய் கொண்டை  முறுக்கி, பெட்டை கோழியிடம் தஞ்சமடைந்துவிட்டேன் 

பாறையை கடக்கும் நீர் வீழ்ச்சியாய் - உன் நினைவுகளின் படியேறி தலை கொடுத்து நனைத்துக்கொள்கிறேன், என் உணர்சிகளின் வழியே என் உயிர்ப்பை மீட்டெடுக்கிறேன்   

செல்லமாக வந்த உன் பாச பரிவர்த்தனைகள் - மூச்சு முட்டி போகிறது என்னுள், எத்தனை முறை பார்த்தாலும் நினைவில் இல்லை உன் முகம், மீண்டும்  மீண்டும் பார்க்க தவிக்கிறேன் 

என் கண் கொண்டு நான் கண்ட நிமிடங்கள் - உன் கண் அசைவில் கலைந்துவிடுகிறது, உன் நெற்றியில் நான் வைத்த  பொட்டு என் மனதை தட்டி விட்டு செல்கிறது    

ஊஞ்சல் தனில் நீ ஆட நான் கண்ட நேரத்தில் - என் காதல் கொண்ட கள்ள நெஞ்சம், மூச்சு விட காற்றில்லாமல் கடன் வாங்கி கலங்கி நிற்கிறது 

தீர்ந்து போன சொல்லில் உள்ள அர்தெமெல்லாம் - தீயாகி என்னை தீண்டிவிட்டது , இப்பொழுதெல்லாம் சொல்ல வார்த்தை இல்லாமல் பெருமூச்சு ஒன்றே என் உணர்வானது

சிறுவயதில் கட்டிய அன்பு கோயில் ஒன்று கடவுள் இன்றி காட்சி அளிக்கிறது, உன் மூன்று கால பூஜைக்காக ஏங்கி தவிக்கிறது 

அறிவியலின் அறிவை கொண்டு என் உணர்வுகளை உணர்த்திவிட, மடிந்து  விட்ட காலத்தை நோக்கி வாழ்க்கை ஓடி விட்டது, ஆசை வைத்த அத்தனையும்  ஓடி வந்து ஓசை இன்றி ஒட்டிக் கொண்டது    

எங்கே செல்லும் இந்த பாதை ? நான் தொலைத்துவிட்ட தொலை தூர பயணம், உன்னிடம் கெஞ்சி கேட்கிறேன்  என்னை திருப்பி அனுப்பி விடு... நான் வந்த வழி தேடி சென்று விடுகிறேன்

உன் மனம் தேடி புதுவித  புரிதலுடன். என் மனம் கொத்தி பறவைக்காக - பல்லாயிரம் கவிதையோடு நான் காத்திருக்கிறேன்  



Prakash S

Comments

Popular posts from this blog

விலைமாது..........???

பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

அன்பு காதலிக்கு ...........