பேசாத காதல்........

மௌன மொழி...
ஆயிரம் ஆசைகள் உதிக்கின்றன - மனதிற்குள்
உன்னிடம் பேசுவதற்காக ..
முழு நிலவின் வெளிச்சத்தில் பயிற்சி செய்து பார்க்கிறேன் பலமுறை
தவறு கூடாது என்பதற்காக ..
குழந்தை மொழி பேசுகிறாய் என்னிடம்
முழுமையாக தந்துவிட்டேன் என்னை உன்னிடம்..
கடலின் அழம் கூட அறிய முடிகிறது - உன் மனதை தவிர
தோற்றுவிட்டது விஞ்ஞானம் உன்னிடம்..
தவறாமல் பார்த்துவிடுகிறேன் சூரிய உதயத்தை
தூக்கம் கலைந்த உன் கண்களை காண வேண்டும் என்பதற்காக..
பூக்காரியும் பழக்கமாகி விட்டால் - தினசரி
உன்னை காண பேருந்து நிலையம் வருவதால்..
எத்தனையோ முறை உன் பெயரை சொல்லிஇருகிறேன் மனதிற்குள்
முடியவில்லை என்னால் உன் முன் உச்சரிப்பதற்கு..
உன் அழகிய சிரிப்பில் மயங்கி
கவிதை படைத்திருக்கிறேன் பலமுறை ஒருமுறை கூட படித்தது இல்லை உன்னிடம்..
உன் நிழலின் மீது குடை பிடித்திருக்கிறேன்
உன் முகம் மீது வெளிச்சம் படாமல் இருப்பதற்காக
ஒருமுறை கூட சொன்னதில்லை உன்னிடம்..
கனவிலும் கூட மௌனம் காத்திருக்கிறேன் உனக்காக
எங்கே என்னிடம் பேசாதே என்பாயோ என்பதற்காக ...
நீ உதிர்க்கும் அத்தனை புன்னைகைகும் சொந்தக்காரன் நான்
பலமுறை படித்திரிக்கிறேன் உன் புன்னகையை ஆனால்
ஒரு முறை கூட புரிந்துகொள்ள முடியவில்லை
புரியாத மொழியில் பேசுகிறாயே... !
எப்படியோ இன்னமும் முயற்சிக்கிறேன்
உன்னிடம் என் ஆசையை சொல்ல
என்ன செய்வது ஊமையாகிய எனக்கு
மௌனமே மொழியான போது ......?
அருமை. தொடரட்டும் மேலும்...
ReplyDeleteஉனக்கு மட்டும் இல்லை என் நண்பா!
இந்த பேசாத காதல் , மௌனமொழி
இந்தபூமியில் நம்மை போன்ற பல வாலிபர்களுக்கும் தான்....