கலையாத நட்பு ........



என் அன்பு தோழிக்கு ....

ஆயிரம் சுமைகள் என்னுள் 
கலங்கிய கண்களுடன் நான் -இன்று.

வாடாத முகம் கொண்ட வசியக்காரியே - 
நீ வசை பாடாத  வார்த்தைகளே இல்லை என்னிடம்

பேசாத நாள் கண்டதில்லை நான் உன்னிடம் 
உன்னை மறந்த நோடிபோழுதை அறிந்ததில்லை நான் என்னிடம்

ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் என்னிடம்
எனக்காக நீ சிந்திய சில மணி துளிகளில் நான் சேகரித்தது

சிந்தாமல் சிதறாமல் 
எத்தனையோ முறை என்னை ஏற்றிவிட்டிறிக்கிறாய் ஏணிபடியாய்
ஒவ்வொரு கால்தடமும் தன்னம்பிக்கையின் தடயங்களாய் ....

பட்டமரமாய் நின்றிருந்தேன் நான் தோற்றுபோனபோழுதெல்லாம்
தோள் கொடுப்பாயே நான் 
துவண்டு விடாமல் இருப்பதற்க்காக

உன் இரும்பு இதயம் கண்டு இறுமாப்பு கொண்டிருக்கிறேன் நான் பலமுறை 
கரும்பாய் இனிக்குதடி உன் நட்பு

மாற்றம் ஒன்றே மாறாததாம் இவ்வுலகில் - நம் நட்பை தவிர 
எத்தனை மனிதர்கள் நம் வாழ்க்கை பாதையில்
நீ மட்டும் சிறப்பாய் ஏன் என் மனதிற்குள்

சத்தியமாக மறைந்திருப்பேன் இம்மண்ணைவிட்டு - நம்மிடம் 
நட்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்

இன்னமும் தேடிகொண்டிருக்கிறேன் நான்
நம்மிடம் நட்பு ஏற்படுத்திய நிமிடத்தை 
காலங்கடந்த காலச்சுவடிகள் போல் கண்ணியமானது நம் நட்பு

சிவந்துபோன உன் விழிகள் கூட 
கண்ணீர் சிந்துகின்றன எனக்காக மட்டும்
நாம் பிரியும் சில நிமிடங்களுக்காக
காரணம் தேடி அலைந்திருக்கிறேன் நான் பலமுறை
விடை தெரியாமல் இன்றுவரை

நான் பேசாமல் உன்னால் மட்டும் எப்படி 
என்னை புரிந்துகொள்ளமுடிகிறது
இது என்ன விஞ்ஞானம் வியப்பில் நிற்கின்றேன் நான்

நான் காட்டாறாய் இருக்கும்போழுதெல்லாம் 
என்னை கட்டுப்படுத்தும் இரு கரையாய் தான் உன்னை கண்டிருக்கிறேன்

எத்தனையோ உறவுமுறையை உரமிட்டு வளர்த்திருந்தேன் 
உயிரோடு உயிராய் வளர்த்தேன் உன்னை மட்டும்

பலமுறை பயிற்சி பெற்றுரிக்கிறேன் - நான் 
பக்குவமான உன் அணுகுமுறையை கண்டு 

உலகத்தில் உயர்ந்ததெல்லாம் நம் 
கண்ணனுக்கு முன்னால் தான் தெரியும் ஆனால் 
அழகான நம் நட்பு நம் மனதிற்குள்தான் தெரியும்
யாரரிவார்கள் அதன் அருமையை .. நம்மையன்றி .....!

யாரிடம் இனி சொல்வேன் என் எண்ணங்களை
நீ இல்லாத இப்பள்ளியில்
கலங்கிய கண்களுடன் நான் -இன்று
நீ வேறு பள்ளிக்கு மாறி போகிறாய் என்று ...!!!

Comments

  1. நட்பு , அன்பு இவை இரண்டும்
    நாம் அருகில் இருக்கும்பொழுது மேலும் பலப்படும்.
    ஆனால் தொலைவில் இருந்தாலும் துவண்டுவிடாது...

    நட்புக்கு இல்லை - ஓர் எல்லை
    நட்பு கலையாமல் தொடரட்டுமே ....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விலைமாது..........???

பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

அன்பு காதலிக்கு ...........