யாரடா நீ...?


எங்கே சென்றுவிட்டாய் என்னவனே...

யாரடா நீ...?

என்னை தவிக்கவிட்டு சென்றவன்
முரண்பாடு காண்கின்றேன் என் நினைவுகளில் 

இப்படி ஒரு தவிப்பை கண்டதில்லை நான் என் வாழ் நாளில் 
கண் திறந்து விழி நோக  காண்கின்றேன்

விரல் தீண்டாத என் பாகங்கள் விழித்துக்கொண்டு 
விடை கொடுக்க மறுக்கின்றன 
தண்ணீர் கொண்டு தேகச்சூடு தணிக்க திண்டாடிப்போகிறேன்

யாரடா நீ...?
 
என் மேல் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவன் ..?

இப்பொழுதெல்லாம் நான் உடுத்தும் 
உடை கூட எனக்கு பிடிப்பதில்லை
நான் உன்னை உடுத்திய பிறகு

தாங்காத தேகம் கொண்டு தன்னிறைவாய் நிற்கிறாயே 
நிர்கதியாய் இங்கு நான் 

மூடாமல் போட்டுவிட்ட முழு நிலவாய் நான் இங்கிருக்க
சூரியனாய் சுட்டெரிக்கிறது உன் நினைவுகள் 

யாரடா நீ ..? 

என் உற்சாகத்தை வேரறுத்தவன்...

மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன் உன்னை
நான் செய்த தவறு என்ன..? தவிக்கவிட்டயே என்னை

தாய் தந்தை மறந்தேன் உன்னை மட்டுமே  நினைப்பதற்க்காக
மறந்த கனம் கண்டதில்லை நான் என்னிடம் - உன்னை பிரிந்தபோது

முழுவதுமாய் அர்ப்பணித்தேன் என்னை உன்னிடம்
அடைக்கலம் புகுவேன் உன்னிடமின்றி யாரிடம்.. ?

யாரடா நீ...? 

உண்ணும் உணவு கூட உப்பாய் கரிக்கிறது 
உன்னை பிரிந்த கனத்தை என்னும்பொழுது

தேட வைத்துவிட்டாயே உன்னை
எங்கே தேடுவேன் - என் மனதைஅன்றி 
என்னுள் நீதானடா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறாய்

வெட்கத்தை மட்டுமே அறிந்த என்னை 
வெளிப்படையாய் கேட்கவைத்தாயே ..!!  

தவிக்கிறது என் தேகங்கள் நீ தீண்டமாட்டாயா என்று 
என்று வருவாய் நீ என ஏளனம் செய்கிறது என் ஆசைகள்

இத்தனைநாள் கண்டதில்லை நான் 
இப்படிஒரு தடுமாற்றத்தை என்னுள் 
இரட்டிப்பு சந்தோசம் என் மனதிற்குள் உன் வரவை கேட்டு..  

போதுமடா உன் பிரிவு என்னிடமிருந்து
என்று வருவாய் நீ என ஏங்கிதவிக்கிறது என்மனம்

வெட்க்கம் விட்டு வெளியிட்டேன் என் எண்ணங்களை
புரிந்துகொள்வாய் நீ என ..  

கலங்கிய கண்களுடன் காதலுடன் காத்திருக்கும்
கணவனை பிரிந்த மனைவி ......!!!!!!!

பிரகாஷ் .சு

Comments

  1. கலங்கிய கண்களுடன் காதலுடன் காத்திருக்கும்
    கணவனை பிரிந்த மனைவி ......!!!!! என்பதனால் தலைப்பு சரியா? அல்லது மாற்றம் தேவையா?
    காதலன் முகம் காணாத கன்னியெனில் சரிதான்... கணவனுக்காக காத்திருக்கும் கன்னி அல்லவோ இவள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விலைமாது..........???

பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

அன்பு காதலிக்கு ...........