எப்படி முடியும் என்னால்..???

எப்படி முடியும் என்னால்.....
ஒரு முறை உன்னுடன் பேச வேண்டும் வா என்றாய்
துள்ளி குதித்து ஓடி வந்தேன்
உன்னிடம் இருந்த மனக்கவலையை கொட்டினாய்
என்னிடம் ஏந்தி நின்றேன்
ஆற்றுமணலில் ஒய்யாரமாய் கை பிடித்து நடக்கிறாய்
ஆர்ப்பாட்டமில்லாமல் நடக்கிறேன் நான் உன்னுடன்
இரகசியம் என்ற பெயரில் காதருகே கிசுகிசுக்கிறாய்
ஒசைஇல்லாமல்
எத்தனையோமுறை என் முகம் பார்த்து
பேச மறுத்து இருகிறாய்
என் பெயரை உச்சரிக்கும் பொழுதெல்லாம்
உள்ளுக்குள் எதோ உணர்வதாய் சொல்கிறாய்
திடிரென என் தோள் சாய்ந்து காரணமில்லாமல் அழுகிறாய்
கேட்டால் உன் தோள் சாய்ந்து அழுவது பிடிக்கும் என்கிறாய்..!
தாமதமான என் நிமிடங்களை நின்றுகொண்டே ரசித்து இருகிறாய்
கேட்டால் உனக்காக இதுவும் செய்வேன் என்கிறாய்
நான் ரசித்த விஷயங்கள் எல்லாம் பிடிக்கும் என்கிறாய்
கேட்டால் உன் தீர்வு சரியாக இருக்கும் என்கிறாய்
மனதிற்குள் குழப்பத்தை விளைவிக்கும் செயல்கள் எல்லாம் செய்கிறாய்
கேட்டால் சிரித்துகொண்டே சென்றுவிடுகிறாய்
இப்படியாக நீ இருந்தால் எப்படி முடியும் என்னால்
உன்னை காதலிக்காமல் ......???
பிரகாஷ்.சு
Comments
Post a Comment