உன் மடியில் என் தூக்கம்...
இது என்ன... இந்த படம்.. ஏதோ ஒன்றை... இட்டுக்கட்டி இரட்டிப்பு செய்கிறது...
தாய் மடிக்கும்... என் தேவைக்கும் இடையில் நடக்கும் கலவரம்...என்னை உன் காதலில் இட்டுச் செல்கிறது...
உன் மடியில் தவழும்
என் தலையில் உன் கை கோதும் போது கனத்து விடுகிறது என் மனது... தாய்மை என்ற
உணர்வால்...
என்னை பொருத்த வரை
உன் காதலே என் தாய்மையாகும்....
இரவுக்கும் கண்
இருக்குமானால்... அதுவும் என்னுடன் சேர்ந்து கண் விழித்து கவி பாடும்...
அக்கறையுடன் நீ பார்க்கும்
ஒவ்வொரு நொடியிலும்... பக்கம் பக்கமாய் பதில் சொல்லும்...
உன் மார்பில்
மண்டியிடும் மணியின் பிடியில் அழகாக்கும் அந்த அட்டியல் மீதும் பொறாமை கொள்கிறேன்...
என் நெஞ்சம் அது...
வஞ்சனை இன்றி வஞ்சிக்கிறது...என்னை...!
வறுமையின் காரணமாக
இருக்கலாம்...நீ என்னைக் கொஞ்சமாக...கொஞ்சுவது
அளவுக்கு மிஞ்சிய
அமிர்தமும்...நஞ்சு...பரவாயில்லை... அளவோடு மட்டும் வேண்டாம்... உன் கொஞ்சலுக்கும்
மதியுண்டு...
எழுப்பி விட்டு எட்டி
போகதே... என்னால் முடிந்தவரை முக்தி அடைகிறேன் உன் மடியில்...
உன் புன்சிரிப்பில்
பூக்கும்... பூக்களை நீயே சூடி கொள்கிறாய்... என் கைகளுக்கும் சற்று வேலை கொடு...
ஆனால் உன் கையை மட்டும் எடுத்து விடாதே...
என்னை தூங்க
வைத்து... அழகு பார்க்கும் உன் அழகு... பெண் குழந்தையை காண்கிறேன் உன்னுள்...
பேரின்பம் எங்கேயாவது
தொலைந்து விடுமா... சொல்லிவிடு என்னிடம்...
தாயாக நீ...
உன்னால் நான்
மீண்டும்...மீண்டும் பிறக்கிறேன்... அதே உதிரத்தோடு... என்னை அப்படியே ஆரத்தழுவிடு…
கொஞ்சம் நேரம்
அயர்ந்து விடுகிறேன்...உன் மடியில்... எழுப்பி மட்டும் விடாதே... என்னை...!!! பல நாள் ஏக்கத்துடன் உன் மடியில் என் முகம் புதைத்திருக்கிறேன்…😍😍😍
Prakash S
28.07.23
Comments
Post a Comment