முதுமையிலும் காதல்...
வயது, நம் காலத்தை மட்டுமே தீர்மானிக்கும்... நம் காதலை அல்ல...!
இளமையில் மட்டுமல்ல.... உன் தலை நரைத்த நாட்களிலும் நம் காதல் ஒரு குழந்தைதான்
பிரியாத வரம் கேட்டு காதலால் கோர்த்த கைகள்...
என் கண்ணில் கண்ட கனவெல்லாம் கைப்பற்ற நினைத்து கணவனாகி போனேன்...
இரவில் முளைத்த நம் முதல் உறவு...
முத்தத்தின் முனகளில் தொடங்கியது...
கனத்த உடலை தாங்கி கசங்கிய உன் ஆடைகளில் ,
ஆசையுடன் அலங்கரித்த நம் காமமும், காதலும்...
வாழ்கையின் அடையாளமாய்... நம் வாழ்வின் அணிகலன்
விரத பூஜை கண்டதில்லை நான்... உன் கட்டில் பூஜையை கண்ட பிறகு...!
காதலிக்க மறுத்த தருணங்களில்...தவழ்ந்து போகும் உன் நினைவுகள்...
ஆசையை கொண்டு அளவற்ற ஆட்சி அமைக்க...
கட்டில் பூஜைக்கு கடவுளின் பரிசு...
மடியில் மழலை கண்டாய்... அதோடு என்னையும் அனைத்துகொண்டாய்
நிஜத்தை விட நிழல் அழகானது... என் வாழ்வின் நிழல் நீயாய்...
முக்காலும், முழுதும் மாற்றாய் நீ எனக்கு ...!
தாய்க்கு பின் தாரம் என்றார்கள்...மந்திரத்தை மாற்றிய மாயக்காரி
தாயாய்--- என் தாய்க்கும் ஒரு தாயானாய்
தோழியாய்--- என்னை கலங்கடித்தாய்
உறவாய்--- என்னை ஊட்டி வளர்த்தாய்
முழுவதுமாக மாறி போனாய்... நீ உன்னை மறந்து...
கை பிடித்தவன் எல்லாம் உன் பார்வையில் இல்லை
உன் கண்ணில் பற்றினேன் கைதியாக்கி கொண்டாய்...
பிணை இல்லாத உன் மனச் சிறையில்...
வயதும் வரம்பு மீறியது... என்னுள் நான் கண்ட வயோதிக மாற்றம்...
நீ மட்டும் எப்படி அப்படியே... எனக்கு இப்பவும் அந்த முதல் நாள்
கண் முன் வந்து போகிறது... வெட்கம் கண்டேன் உன் உதட்டோரத்தில்...
ஆஹா... மேலும் அழகாகி போகிறாய்
வயோதிகம் காலத்திற்க்கு மட்டும்தான் ... என் கண்களுக்கு அல்ல போலும்...
வித்தியாசமான விதி... நமக்கு மட்டுமே பொருந்தும்
வளர்ந்து விட்ட பிள்ளைகள் கூட பிடிவாதம் பிடிக்க... எப்படி நீ மட்டும் என்னை விட்டு விலகவே இல்லை என்னை...!
விக்கல் வரும்பொழுதெல்லாம்...உன் கைகள் மட்டுமே என் மருந்தாய்...
உன் தலை சாய்க்கும் என் மடிக்கு... கை கோதும் என் விரல்களே சாட்சி...
மனம் என ஒன்று இருந்தால் அதில் அடிவரைக்கும் உன் முகமே காட்சி...
வயதுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை....
நம் வயது கூடும், காதலும் கூடும்...
கை எட்டும் தூரத்தில் இருந்தாலும்... நீ தரும் தண்ணீரும்
என்னால் படிக்க முடியாத சிறிய புத்தகத்தை ... நீ வாங்கி வாசிப்பதும்
எட்டி பிடித்து நீ எடுக்கும் பாத்திரமும், அந்த இடையில் தெரியும் இம்சைகளும்...
எனக்காகக் நீ மறைத்துவைக்கும் மரியாதைகளும்...
மாலை நேரத்து மயக்கங்களும்...
மங்கலாக தெரிந்தும் நீ பார்க்கும் பார்வைகளும் -
ஏனோ என்னை ... ஏக்கமுடன் நம் வாழ்வை தொடங்கிய நாட்களுக்கு கூட்டிச் செல்கிறது...
இத்தனை இருந்தும், இன்னமும் நான்...
இப்படிதான் உன்னை காணும் ஒவ்வொரு முறையும்...
என் பின்னால் உன்னிடம் கொடுக்காத பல..
ரோஜாக்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...
பல இரவுகள் நான் உறங்க நினைத்தாலும்... நீ கொடுத்த நினைவுகள்...
உன்னோடு உறங்க மறுக்கிறது...நம் கடந்த காலம் கொண்டு...
பிரகாஷ் சு (Shan to Dev )
03.08.23

Comments
Post a Comment