இதழில் கதை எழுதும் நேரம் ...

 




ஆணவக்காரி அவள்... என் காதலி 

அவளின் முதல் முத்தம் 

கன்னத்தில் இட்டால்... நான் கலங்கிவிடுவேன் என்ற அச்சத்தில்   
என் நெஞ்சத்தில்... இதழ் பட்ட இடத்தில் மட்டும் இருதயம் 
சற்று நின்று போனது...   
 
உன்  அங்கத்தின் அடக்குமுறைக்கு அடங்கிபோகி 
மஞ்சத்தின் மையத்தில் தலை சாய்த்து, சஞ்சரிக்கும் உன் அழகை கண்டு 
தண்ணீருக்குள் பூத்த தாமரையாக நம்  காதலை ஆலாபனை  செய்துவிட்டேன்...  

சத்தமில்லாமல் நீ  செய்யும் இம்சைகெல்லாம் வெட்கமில்லாமல் வியந்து போனால், என்  பக்கம் வந்து பாய் விரிக்கிறாய்... 
பெற்றெடுத்த பிள்ளை போல வாரிக்கொண்டு மழைக்கு பிடித்த குடையாய் மாறிப்போகிறாய்... 


இடுப்பில் இருக்கும் மடிப்பை கொண்டு உன்னை பிணைத்து கொள்ள தவித்து போக, மார்போடு அணைத்துகொண்டு மல்லுக்கு நிற்க்கிறாய்... 

எனக்காக அமைத்துக்கொண்ட உலகத்தில்... நம்  காதலின் பரிசாக   
என் முத்தம் கேட்க  !  என் இதழ் பதித்த தருணத்தில்... 
உன்  அங்கத்தின் அசைவுகளை  என் மார்போடு சண்டையிட்டு சமாதானம் செய்கிறாய் ... 

மெதுவாய் உன்  இதழ் கடிக்க, உன் கண்ணை மூடி என்னை கலவி செய்கிறாய், காத்திருந்த கயவன் போல உன்னை அள்ளிக்கொண்டு ஆடை கலைத்தேன்...

கண் மூடிய உன்  பார்வை என்னை அணைத்துக்கொள்ள, கிட்ட வந்து கிறங்கி போகிறேன்... உன் மூச்சு பட்ட என் தேகத்தில் காட்சிப்பட்ட  என் அதிர்வுகள்... 

அடடா முத்தம்  இத்தனை அழகா ? 

உன் இதழ் மேல்...  என் இதழ் கொண்ட காதலுக்கு... தாயை கண்ட குழந்தையாய் உன் முகம் ... எப்படி சொல்வேன் அந்த அழகினை
பக்கம் வந்து பார்த்து விட்ட பிள்ளை நிலாவாய் பூரித்து போனேன்... . 

கலைந்து போன உன் கூந்தலுக்குள் நான் காணமல் போக ... எட்டிப்பார்த்து ஏவல் செய்து , சிதறி போன உன் முடிகள் என் மூக்கின்  மேல் கோலம் போட்ட உணர்வுகள்... 
ஆஹா !👄  என் ஆண்மையெல்லாம் அடங்கியே போயின...!     


மொட்டு விட்ட முல்லைகொடியாய் என் மார்பில் நீ !  பரிதவித்து பக்கம் பார்த்து என்  கையோடு  காதல் கொள்ள... கட்டுக்கொண்ட  என் கனவுகள் கட்டவிழ்ந்து போயின... 

காத்திருந்த காதல் இப்படியும் காமம் செய்யும்... உன் கோபுரத்தின் தரிசனத்தில் உன் மேல் என் கை பட்ட  இடமெல்லாம் காமத்தில் சேராது ...

உன்னை அள்ளிகொண்ட அந்த நிமிடங்களில் என்னை கிள்ளி கொண்டது ஏராளம்.. உன் உச்சத்தின் உண்மையை என் உள்ளங்கையில் கண்டு கொண்டேன்   

தள்ளி நின்று நான் கண்ட காட்சிகள் என் கண்ணுக்குள் அனுமதியின்றி அலம்பல் செய்கிறது...உன் உடலின் வாசமும் என் வசம்... 

உன்னை முத்தமிட என்னை மொத்தமும் இழந்துவிட்டேன்... கட்டி வைத்த என் ஆண்மைக்குள் கொட்டி வைத்த அற்புதங்கள்... விட்டு விட எண்ணமில்லாமல் 
கட்டிக்கொண்டு உன் கண் திறக்கிறேன்  


ஏதோ சில சிலிர்க்கும் நினைவுகளில் மூழ்கிக்கொண்டு, சிரித்துக்கொண்டே கடந்துவிடும் வழக்கமான நிகழ்வா ???  என்னை அப்படியே சுற்றிக்கொண்டு கட்டுவிக்கிறது... 

முட்டி மோதி முடிந்துவிட்ட தருணத்தில் 
அதோ அங்கே இரண்டு இதயங்கள் இளமையின் அரங்கேற்றத்தின் ஆரம்ப நிலையில் தன்னை அற்பணித்துகொண்டிருகிறது...   

  


Prakash S 

04.08.2023 

21/07/2023 - Reference 












  


Comments

Popular posts from this blog

விலைமாது..........???

பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

அன்பு காதலிக்கு ...........