ஏக்கம் கொண்டு...

 








விமர்சனம்...

ஏக்கம் கொண்ட என் எண்ணங்களுக்கு மட்டும் இல்லாமல் 
தன்னிச்சையான மனதின்  
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறது...

தண்ணீருக்கும் தடுமாறும் குணம் உண்டு
என் கண்ணீருக்கும் வேண்டும் அந்த விதி..!
இரண்டுமே ஒரே ஜாதி என்பதால்  

விதை இட்டால் முளைத்துக்கொள்ளும் என தெரிந்தால் 
புதைத்து விடுவேன் என் நினைவுகளை.. 
காதலை  நீராக்கி வளர்த்துவிடுவேன் என் வாழ்வுதனை..

காய்க்கும் நேரமெல்லாம் கல்லடி படுகிறேன்...
ஏன் எனக்கு உரிமையில்லையா...?
நமதான உரிமையில் உரம் இட்டேன்னே...!
பலன் மட்டும் கூடாதாம் - இது என்ன கூத்து ?

என்  அன்பை கொண்ட இடமெல்லாம், எனக்கு  சொந்தம் இல்லை 
மனம் கொண்ட மரக்கொத்தி பறவையாய் - என் மரம் தேடி அலைகிறேன் 

உன் காலடி பட்ட  இடமெல்லாம் இருளாகத்தான் இருக்கிறது 
ஜன்னல் இல்லாத  அறைக்குள் நீ - 
எனக்குள் வெளிச்சம் தேடி ஏற்றி  வைத்த விளக்காய் நான் 

உன்னை கண்ட நேரம் கண்களுக்குள் காந்த சக்தியாய் 
உள்ளார்ந்து போனால் - கண்ணில் விழுந்த மண் துகளாய் 
கண்ணீரில் கரைந்து போகிறேன் 

மண்ணில் விழுந்த மழைத்துளி போல் - உன் மார்பில் சாய சங்கமித்தால் 
விண்ணில் விழித்த சூரியனால் சூடாகி போகிறேன் 

சொந்தமென நினைத்த நிகழ்வுகள் எல்லாம் 
நிராகரிக்க படும் எனத் தெரிந்தால்...பந்தம் பாசம் ஏது ?  
செவி கேட்ட சேதிகள்.. கண் கண்ட பார்வைகள்...
மனம் மரித்த பிறகு யாருக்கு சொந்தம் ?

மனம் எனும் மாய கோட்டையில் கட்டி வைத்த கட்டிடம் 
காற்று பட்டு கலைந்து போனது - எச்சம் வைத்து ஆற்றிக்கொண்டேன் 
அந்த ஆறாத வடுக்களை 

எப்படி  பார்த்தாலும் நான் ஏளனமாகத்தான் தெரிகிறேன் உன் கண்களுக்கு 
என் தரம் தாழ்ந்த தவிப்பால் தரமற்று போனேன் 
ஏக்கம் கொண்ட என் மனதிர்க்கும் ஓர் குழந்தை தனம் இருப்பது தெரியாமல்...!    
அப்படியே விட்டு விடு... கெட்டு போகாமல் உன்னை இட்ட இடத்தில் 
பட்டுடுத்தி சஞ்சமிக்கிறேன் - பெண்ணே என்னை யார் என்று தேடுகிறாயா ?

சற்று உன் மனதிற்குள் எட்டிபார் அங்கே 
உன்னால் குழந்தையாக்கப்பட்ட குமரானாக நான்...   


Prakash S






 

Comments

Popular posts from this blog

விலைமாது..........???

பெண்மை... !!! ஓர் மணலின் ஏக்கம்

அன்பு காதலிக்கு ...........